கொரோனாவால் இறந்த மகன்.! வீட்டிற்கு சென்று திறந்து பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அரசின் மையத்தில் 22 வயது இளைஞர் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், அவருடைய உடலை எரித்துவிட்டு அவருக்கு பதிலாக 65 வயது முதியவரின் உடலை மருத்துவமனை கொடுத்தது தற்போது அம்பலமாகி இருக்கிறது. 

மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராம் விஷால் குஷ்வாகா. இவருக்கு 22 வயதில் மகன் இருந்துள்ளார். இந்நிலையில், அந்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன் பின் அவருடைய உடல்நிலை குறித்த தகவல்கள் எதுவும் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்படவில்லை. 

தனது மகன் குறித்து அறிய ராம் விஷால் மருத்துவமனையுடன் போராடியிருக்கிறார். கடந்த 9ம் தேதி அவருடைய மகன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். பிணவறையில் தனது மகனின் பெயர் எழுதி வைக்கப்பட்டு இருந்த பையை பெற்றுக்கொண்டு வீட்டிற்கு வந்து திறந்து பார்த்தபோது, அதில் 65 வயது முதியவரின் உடல் இருப்பதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரித்தபோது தவறுதலாக உள்ளாட்சி துறையினர் தங்களுடைய மகன் உடலை தகனம் செய்திருக்கலாம் என்று அலட்சியமாக கூறியுள்ளனர். இதனால், அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உறவினர்கள் முற்றுகையிட்டனர். 

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வழக்கில் டாக்டர் ராகேஷ் பட்டேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மகனின் இறப்புக்கு காரணம் தெரியாமல் அவனது அஸ்தியும் கிடைக்காமல் குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hospital gives another person dead body


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->