மும்பையில் கனமழை காரணமாக 12  பேர் பலி.! மீண்டும் வானிலை மையம் எச்சரிக்கை.!! அச்சத்தில் மக்கள்.!!! - Seithipunal
Seithipunal


மும்பையில் தற்போது கொட்டி தீர்த்த கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது ரயில் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் 54 சென்டிமீட்டர் மழை  பெய்துள்ளதால் மும்பை நகர பகுதி வெள்ளக்காடானது.

ரயில்  தண்டவாளங்கள் முழுவதும் மூழ்கியுள்ளதாகநல சோப்பரா, சயான், மட்டுங்கா ரயில் நிலையங்களில் ரயில்கள் மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. வெள்ளத்தில் ரயில்களை இயக்குவது ஆபத்தானது என்பதால் புறநகர் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. விமான சேவை பொருத்தமட்டில் ஓடு  தளத்தில் நீர் அதிகமாக இருக்கும் சில விமானங்கள் ரத்து செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதனிடையே ஜெய்ப்பூர் மற்றும் மும்பை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் ஓடுதளத்தில் விட்டு வழுக்கி சென்றது இந்த சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை என்று மும்பை விமான நிலையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனிடையே மேலும் 2 நாட்கள் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.பால்கர் மாவட்டம் உள்ளிட்ட இடங்களில் தீவிரமானது முதல் அதிதீவிரமான வரை மழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

மும்பையில் கிழக்கு மலாட் பகுதியில் உள்ள பிம்பிரிபடா  பகுதியில் குடிசைகள் இடிந்து விழுந்ததில் 12 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர் மேலும் 13 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும்  புனேவில் உள்ள சிங்கேட் கல்லூரியின் சுவர் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் பேரிடர் மீட்பு குழுவினர் நிகழ்விடத்தில் மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

புனேவில் மூன்று இடங்களில் சுவர் இடிந்து விழுந்ததில் 15 பேரும் மேலும் பல்வேறு காரணங்களால் 8 பேரும் உயிரிழந்தனர் இதுவரை  கன மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

heavy rainfall in mumbai 12 persons died.


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->