அனல் பறக்கவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்...! பரபரப்பு மத்தியில் நாளை தொடங்குகிறது...!
heated parliamentary session begins tomorrow amidst excitement
இந்த பரபரப்பான அரசியல் சூழலில், நாளை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரானது,ஆகஸ்ட் 21- ந் தேதி வரை நடைபெற இருக்கிறது.

மேலும், ஏப்ரல் மாதத்தில் நடந்த பகல்காம் பயங்கரவாத தாக்குதளுக்கு பதிலடியாக மே மாதம் பாகிஸ்தான் மீது மேற்கொள்ளப்பட்ட ''ஆபரேஷன் சிந்தூா்'' நடவடிக்கை மற்றும் இரு நாடுகளின் ராணுவ மோதலுக்கு பிறகான முதல் கூட்டத் தொடா் என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கூடுதலாக ஆபரேஷன் சிந்தூர், நாட்டையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்து, டிரம்பின் பேச்சு,சீன எல்லை விவகாரம்,பீகாரில் எதிா்க்கட்சிகளின் எதிா்ப்பை மீறி நடை பெற்றுவரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள், மணிப்பூருக்கு பிரதமா் மோடி இதுவரை பயணம் மேற்கொள்ளாதது, விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களும் முக்கியமாக எதிரொலிக்கும் என தீவிரமாக எதிா்பாா்க்கப்படுகிறது.
மேலும், பல்வேறு பிரச்சினைகளுக்காக எதிர்க்கட்சிகள் அவையை முடக்கி போராட்டத்தில் ஈடுபடும் என்று கருதப்படுகிறது. இந்த மழைக்கால கூட்டத் தொடரில் 8 புதிய மசோ தாக்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் அனல்பறக்கும் எனத்தெரிகிறது.
English Summary
heated parliamentary session begins tomorrow amidst excitement