காவல் துறையினரின் மீது பூத்தூவி வரவேற்ற மக்கள்.. வைரலாகும் காணொளி காட்சிகள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நாம் மிகவும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதன் அடிப்படையில் ஊரடங்கு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

கரோனா வைரஸை கட்டுக்குள் வைக்கவும், பாதிக்கப்ட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் என மருத்துவ குழுவினர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் போராடி வருகின்றனர். இவர்களுக்கு அடுத்தடுப்படியாக மக்கள் அத்தியாவசிய தேவைக்கு வெளியே வந்தாலும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று கூறி மக்களை கண்காணித்து, சரி செய்யும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களை கவுரவம் செய்யும் வகையில் மக்கள் அவ்வப்போது பூக்களை தூவியும், கைகளை தட்டியும் தங்களின் அன்பை வெளிப்படுத்தி வரும் நிலையில், காவல் துறையினர் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளயில் மக்கள் அனைவரும் பூக்களை தூவி காவல் துறையினரை வரவேற்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. 

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் கரோனா வைரசால் 255 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 43 பேர் பூரண நலனுடன் இல்லத்திற்கு திரும்பியுள்ளனர். 3 பேர் சிகிச்சை பலனின்றி இல்லங்களுக்கு திரும்பியுள்ளனர். இங்கு காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், காவல் துறையினரின் கண்காணிப்பு பணியின் போது மக்கள் பூத்தூவி நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hariyana peoples flower thanks for police


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->