#Breaking: பா.ஜ.க தலைமை வெளியிட்ட அறிவிப்பு.. வருத்தத்தில் எச்.ராஜா.! - Seithipunal
Seithipunal


பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் இருந்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், பாரதிய ஜனதா கட்சியில் பதவி வகித்து வந்த பலரின் பதவி மாற்றங்கள் மற்றும் பதவி விடுவிப்பு தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்படி, தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த பட்டியலில் தமிழகத்தை சார்ந்தவர்கள் யாருமே இடம்பெறவில்லை. முன்னதாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளராக எச்.ராஜா இருந்து வந்தார். 

தற்போது எச்.ராஜா வகித்து வந்த தேசிய செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார். 12 துணைத்தலைவர்கள் மற்றும் 8 தேசிய செயலாளர்கள் தொடர்பான பட்டியலில், தமிழகத்தை சார்ந்த யாருக்கும் பொறுப்புகள் வழங்கப்படவில்லை.

முன்னாள் முதல்வர் ராமன் சிங், வசுந்தரா ராஜே சிந்தியா, முன்னாள் மத்திய அமைச்சர் ராதா மோகன் சிங் ஆகியோர் துணை தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

H Raja BJP Posting Relived


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->