திருமண விழாவில் கொண்டாட்ட நடனம்.. துப்பாக்கி சூட்டால் ஏற்பட்ட விபரீதம்.!  - Seithipunal
Seithipunal


வட இந்திய திருமண விழாக்களில் மேல் நோக்கி துப்பாக்கியால் சுடப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகின்றது. இதன் காரணமாக ஒரு சில நேரங்களில் குறி தவறி திருமண விழாவிற்கு வருகை தந்திருக்கும் விருந்தினர்கள் மீது துப்பாக்கி குண்டானது பட்டு விடும். 

இதனால், படுகாயம் மற்றும் உயிரிழப்புகள் உள்ளிட்டவை ஏற்பட்டு இருக்கின்றது. இதனை தொடர்ந்து திருமணங்களில் துப்பாக்கி சூடு பழக்கத்தை கைவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற ஒரு திருமணவிழாவின் போது ஆடல் பாடல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்துள்ளது. அப்போது வழக்கமாக துப்பாக்கி சுடும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது, குறி தவறி குண்டு மேடையில் ஆடிக் கொண்டிருந்த ஒருப் பெண்ணின் மீது பட்டுள்ளது. இதனால் அவர் மிகவும் காயம் அடைந்துள்ளார். 

இதேபோலவே, மணமகனின் நெருங்கிய உறவினர் இருவர் மீதும் குண்டு பாய்ந்துள்ளது. உடனடியாக படுகாயமடைந்த மூவரும் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து துப்பாக்கியால் சுட்டவரை கைது செய்து தவறுதலாக இந்த குண்டு பட்டதா அல்லது வேண்டுமென்றே அவர் துப்பாக்கியால் சுட்டாரா? என்று அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gun shoot in marriage hall


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->