டிரோன் மூலமாக புகையிலை, சரக்கு சப்ளை.. பொறிவைத்து தூக்கிய காவல்துறை.! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸை கட்டுக்குள் வைக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தினமும் மக்கள் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்து வருகின்றனர். 

இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கத்தால் நேற்றுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 9,152 ஆகவும், 857 பேர் சிகிச்சை முடிந்து இல்லங்களுக்கு திரும்பியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை 308 ஆக உயர்ந்தது. 

இந்த நிலையில், ஊரடங்கு அமலில் உள்ளதால் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் குடிமகன்களுக்கு சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல் துறையினருக்கு புகார் எழுந்துள்ளது. 

இதனைத்தடுக்க காவல் துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் இருக்கும் மோர்பி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. இந்த சமயத்தில், சிறிய ரக டிரோன் மூலமாக பான்மசாலா மற்றும் குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat youngster sell liquor items and gutka using drone camera police arrest


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->