சட்டத்துறை அமைச்சருக்கு ஏற்பட்ட சட்ட சிக்கல்... பரபரப்பு தீர்ப்பளித்த நீதிமன்றம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் கல்வி மற்றும் சட்ட அமைச்சர் பூபேந்திரசின் சுஸ்மாவின் தேர்தல் வெற்றியானது செல்லாது என்று குஜராத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. 

குஜராத் மாநிலத்தில் கடந்த 2017 ஆம் வருடத்தில் நடைபெற்ற தேர்தலில், அங்குள்ள டோல்கா தொகுதியில் போட்டியிட்டு, சுமார் 327 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் அஷிவின் ரத்தொரை வீழ்ச்சி சுஸ்மா வெற்றி பெற்றார். 

இதற்கு பின்னர் சட்டத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் நடந்துள்ளதாகவும், இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று ஜனவரி 2018 ஆம் வருடத்தில் அங்குள்ள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

மேலும், மனுவில் 429 தபால் ஓட்டுக்களை விதியினை மீறி தேர்தல் அதிகாரி செல்லாது என்று அறிவித்ததாகவும் குறிப்பிட்டார். இதனையடுத்து இரண்டு வருடத்திற்கும் மேலாக இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், இதற்கான தீர்ப்பு வெளியாகியுள்ளது. 

இந்த தீர்ப்பில், பூபேந்திரசின் சுதஸ்மாவின் வெற்றி செல்லாது என்று கூறவே, சட்டத்துறை அமைச்சர் பதவி பறிபோகும் வாய்ப்பு உருவாகியுள்ளது. மேலும், குஜராத் மாநில மூத்த தலைவர், அரசின் மூத்த அமைச்சர் ஆகிய பதவியை வகித்த சுதஸ்மாவிற்கு இத்தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat law minister victory cancelled by court due to cheat


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->