முதல் முறையாக வழக்கு விசாரணையில் புதிய சாதனை.! உயர்நீதிமன்றம் அசத்தல்.!  - Seithipunal
Seithipunal


முதல்முறையாக இந்தியாவில் அனைவரும் வழக்கு விசாரணையை காணும் வகையில் யூடியூப் மூலமாக நேரலையில் ஒளிபரப்பும் முறையை குஜராத் உயர் நீதிமன்றம் துவங்கியுள்ளது. 

தலைமை நீதிபதி விக்ரம்நாத் அமர்வில் நடைபெற்ற வழக்கு விசாரணை இன்று முதல்முறையாக யூடியூப்பில் நேரடி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இது குறித்து உயர்நீதிமன்றம் இனி வரும் அனைத்து வழக்குகளும் யூட்யூபில் நேரலை நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக வழக்குகள் வீடியோ மூலமாக நடந்து வருகின்றது. இந்தநிலையில், வழக்கறிஞர்கள் மற்றும் மனுதாரர்கள் முழு விவரத்தையும் அறிந்து கொள்ள இந்த முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. 

நீதிமன்றங்களில் நடக்கின்ற விவாதங்களை எல்லோரும் தெரிந்து கொள்ளும் வகையில் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அறிவுறுத்தியிருந்தது.

இதனை அடிப்படையாக கொண்டு இந்த நேரலை விசாரணை தொடங்கப்பட்டு இருப்பதாகவும், வைரஸ் பரவல் போன்ற இக்கட்டான சூழலில் இது மிகவும் உதவியாக இருக்கிறது என்றும் தலைமை நீதிபதி விக்ரம் நாத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gujarat high court investigation on youtube live


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->