மயக்க மருந்து கொடுத்து சொந்த மனைவியை கொடூரமாக சீரழித்த காமுகன்.. அனுதினம் துடித்து இறுதியில் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


எலும்பியல் மருத்துவராக இருந்து கொண்டு, மனைவிக்கு கொடூரமான பாலியல் தொல்லை கொடுத்து வந்த காமுகனின் கொடூரத்தால், மனைவி தற்கொலை செய்துகொண்ட பரிதாப சம்பவம் அரங்கேறியுள்ளது. 

குஜராத் மாநிலத்தில் உள்ள அஹமதாபாத் பகுதியை சார்ந்தவர் மருத்துவர் ஹிதேந்திர படேல் (வயது 47). இவரது மனைவி ஹர்ஷா (வயது 42). இவர்கள் இருவருக்கும் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் நடந்த நிலையில், கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி விஷம் குடித்து ஹர்ஷா தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த அகவல் துறையினர், ஹர்ஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

பின்னர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்கிய நிலையில், திருமணம் முடிந்து ஒரு வருடம் மட்டுமே ஆவதால் வட்டாட்சியர் விசாரணையும் நடைபெற்று வந்தது. இதில், ஹர்ஷாவின் வீட்டினை சோதனை செய்ததில், அவர் கைப்பட எழுதி வைத்திருந்த 18 பக்க கடிதம் கைப்பற்றப்பட்டது. 

இந்த கடிதத்தில், எனது கணவர் ஹிதேந்திராவிற்கும், எனக்கும் இடையேயான தாம்பத்திய உறவு மிகவும் கொடுமையாக இருந்தது. மருத்துவர் என்பதால் அவ்வப்போது எனக்கு தெரியாமல் போதை மருந்தை கொடுத்து, மயக்கமடைந்ததும் கட்டாயப்படுத்தி இயற்கைக்கு மாறான வகையில் தாம்பத்தியம் மேற்கொண்டு கொடுமை செய்வார். மயக்கத்தில் இருந்து எழுந்ததும் நான்பட்ட வேதனையும், வலிகளும் சொல்லியுமாளாது.

இதனைப்போன்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். எனது மாமியார், கணவர் திருமணம் முடிந்த சில நாட்களுக்கு உள்ளாகவே கொடுமை செய்ய தொடங்கினார்கள். கூடுதல் வரதட்சணை கேட்டும் கொடுமை செய்தார்கள். எனது கணவர் ஹிதேந்திரா, அவரது தந்தை மனு படேல், அவரின் தாய் சுபத்ரா படேல் ஆகியோர் குற்றவாளிகள். அவர்களை கைது செய்யுங்கள் " என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஹிதேந்திரா, அவரது தந்தை மனு படேல், அவரின் தாய் சுபத்ரா படேல் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat girl Suicide due to Husband Sexual Torture Hardly


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->