குஜராத் தேர்தல் : சொந்த மாநிலத்தில் வாக்களிக்கும் பிரதமர் மோடி.! - Seithipunal
Seithipunal


182 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்தின் தேர்தல் திருவிழா பல்வேறு எதிர்பார்ப்புகளையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வந்தது. அதன் படி, கடந்த 1-ந்தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், இன்று இரண்டாவது கட்ட வாக்கு பதிவுக்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இன்று மாநிலத்தின் சில முக்கிய பகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளதால், இதை முன்னிட்டு, இன்று காலை பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் ஆமதாபாத் ராணிப்பில் உள்ள நிஷான் பள்ளியில் வாக்களிக்கிறார்.

இதற்காக நேற்று பிரதமர் மோடி காந்திநகரில் உள்ள தனது இல்லத்தில் தாயார் ஹீராபென்னை சந்தித்து, பாதங்களை தொட்டு ஆசீர்வாதம் வாங்கினார். 

அதேசமயம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் பூபேந்திர படேல், உத்தரபிரதேச மாநிலத்தின் கவர்னர் ஆனந்திபென் படேல், குஜராத் காங்கிரஸ் தலைவர் ஜகதீஷ் தாக்கூர் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் இர்பான் பதான், ஹர்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா உள்ளிட்ட பல விஐபிகள் மற்றும் அரசியல் தலைவர்களும் இன்று வாக்களிக்கின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gujarat election prime minister modi voting in agamathabath


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->