அனுமதியின்றி திருமணம்.. திருமண தம்பதியை காவல் நிலையத்திற்கு தூக்கி வந்த காவல்துறை.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்டுள்ளது. வரும் மே மாதம் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். 

மேலும், முதலில் அமலாகியிருந்த ஊரடங்கை நீட்டிப்பு செய்து அறிவித்த பிரதமர், வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நாம் மிகவும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதன் அடிப்படையில் ஊரடங்கு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

இந்த சமயத்தில் முன்னதாக ஏற்பாடு செய்திருந்த திருமணங்கள் தள்ளிவைத்தும், குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையிலும் திருமணம் நடைபெற்று வந்தது. மேலும், திருமணம் நடைபெறும் தகவல் முன்னதாக சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் ஊரடங்கை மீறி திருமணம் செய்ய முயன்ற குடும்பத்தினரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் உள்ள சிக்ஹ்லி பகுதியை சார்ந்த ஜோடிகளுக்கு திருமணம் செய்ய பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதன்படி, ஏப்ரல் 17 ஆம் தேதியன்று திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு இருந்த நிலையில், ஊரடங்கு அமலாகியுள்ளது. இவர்கள் காவல் துறையினரிடம் எந்த விதமான அனுமதியும் பெறாமல் கோவிலில் வைத்து திருமணம் செய்ய முயற்சித்துள்ளனர். 

இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, திருமண தம்பதிகள் மற்றும் உறவினர்கள் என மொத்தம் 14 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat couple and relative try to marriage violent curfew police arrest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->