ஜூன் 28ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்.. வரிகளில் நடைபெறப்போகும் மாற்றம்.? - Seithipunal
Seithipunal


ஜிஎஸ்டி கவுன்சில் 47வது கூட்டம் இம்மாதம் 28 மற்றும் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை தாங்குகிறார். ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்களாக இருக்கும் மாநில நிதி அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

மாநிலங்களுக்கு இடையிலான ஜிஎஸ்டி பகிர்வு தொகை, பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரிகள் மாற்றி அமைப்பது போன்ற பல்வேறு விவாதங்கள் குறித்து ஆலோசிக்க ஒன்றிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. 

ஸ்ரீ நகரில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் மாநிலங்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ள வரி மாற்றங்கள், கேளிக்கை விடுதிகள், குதிரை பந்தயம், ஆன்லைன் விளையாட்டு மீதான ஜிஎஸ்டி வரி விகிதம் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GST Council Meeting on jun 28 and 29


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->