அடுத்த இலக்கு ஆக்கிரமிப்பு காஷ்மீர் : சாமியின் அதிரடியால் ஆடிப்போன பாகிஸ்த்தான்....!! - Seithipunal
Seithipunal


பா.ஜ.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணிய சாமி, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்த தீர்மானத்தை ஆதரித்து மாநிலங்களவையில் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது தொடர்பாக முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சிக்காலத்திலேயே பாராளும் மன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆனால் அது கிடப்பில் போடப்பட்டது.

இந்தநிலையில்,தற்போது காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரையும்   மீட்பதுதான் இந்த அரசின் அடுத்தக் கட்ட நடவடிக்கையாய்  இருக்க வேண்டும்.இந்த திட்டத்தை பிரதமரும், உள்துறை மந்திரியும் நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன்’ என்று கூறினார்.

இனியும் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று கூறிய சுப்பிரமணிய சாமி,சட்ட விரோதமாக ஆக்கிரமித்து தங்களிடம் வைத்திருக்கும் ஆக்கிரமிப்பு காஷ்மீர்
பகுதியையும் இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிடம் கூறுவதை தவிர, அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு மத்தியஸ்தம் செய்வதற்கு வேறு எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கிய பாரத பிரதமர் மோடியின் அதிரடியால் ஆடிப்போயுள்ள பாக்கிஸ்த்தானுக்கு மேலும் ஒரு இடியாக அமைந்துள்ளது சாமியின் பேச்சு


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

government next agenda will get back pakistan occupied kashmir


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->