இந்தியாவில் தங்கம், சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு.. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு இறக்குமதி வரியை குறைத்துள்ளதால் இந்தியாவில் தங்கம் மற்றும் சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கச்சா எண்ணெய் இறக்குமதி நாடான இந்தியா. தங்கம் இறக்குமதியில் உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்த வகையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இறக்குமதியாளர்கள் செலுத்தும் இறக்குமதி வரியை 15 நாட்களுக்கு ஒரு முறை மத்திய அரசு நிர்ணயித்து வருகிறது.

அந்த வகையில் சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் ஆகிய பொருள்களின் இறக்குமதி வரியை மத்திய அரசு குறைந்துள்ளது.

ஆகையால், மத்திய அரசின் இந்த இறக்குமதி வரிக்குறைப்பால் தங்கம், வெள்ளி மற்றும் சமையல் எண்ணெய் பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gold and cooking oil price possible to decrease in India


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->