தனிமையில் இருந்த வீடியோவை கசியவிட்ட காதலன்! 16 வயது சிறுமி எடுத்த முடிவு!! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் அவரின் காதலனுடன் நெருக்கமாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட வீடியோ கசிந்ததால் சிறுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் கூறியதாவது:- குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் சரநகர் என்னும் பகுதியில் வசித்து வருபவர் தான் இந்த 16 வயது சிறுமி. சிறுமி மற்றும் காதலன் இருவரின் சம்மதத்துடன் நெருக்கமாக இருக்கும் காட்சியை வீடியோ எடுத்துள்ளனர்.

ஆனால் சிறுமியின் காதலன் அந்த வீடியோவை நண்பர்களுக்கு பகிர்ந்து விட்டுள்ளார் இப்படியே அவரது நண்பர்களுக்கு அவர்களது நண்பர்கள் என்று கசிய விட்டுள்ளனர். இது சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வரவே சிறுமியின் பெற்றோர் கடந்த மாதம் காவல்நிலையத்தில் இதுகுறித்து சிறுமியின் காதலன் மீது புகார் அளித்திருந்தனர்.

இந்த நிலையில், இந்த சம்பவத்தில் மனம்வேதனை அடைந்த சிறுமி நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியின் காதலன் உட்பட 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl suicide in Gujarat


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->