குழாயடியில் பெண்ணிடம் அத்துமீறல்.! நீதிகேட்ட தாய்க்கு ஏற்பட்ட சோகம்.!  - Seithipunal
Seithipunal


ஹரியானா மாநிலத்தில் இருக்கும் பஞ்ச்குலா பகுதியில் மகளிர் காவல் நிலையம் ஒன்றில், 18 வயது பெண்ணும் அவருடைய தாயும் பல நாட்களாக வாசலிலேயே காத்துக் கிடக்கின்றனர். அந்த காரணத்தை கேட்டால் நமது மனம் கனத்துப் போகும். 

அந்த பதினெட்டு வயது பெண்ணை தெருவில் தண்ணீர் பிடிக்கும் பொழுது 22 வயது வாலிபர் ஒருவர் மானபங்கம் படுத்தி இருக்கின்றார். இதனால் அந்தப் பெண் அழுது கொண்டே தனது தாயிடம் வந்து முறையிட்டுள்ளார் . ஆத்திரமடைந்த அந்தத் தாய் தனது மகளை அழைத்துக்கொண்டு உடனே அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றுள்ளார்.

ஆனால், அங்கிருந்த காவல்துறையினர் இதற்கெல்லாமா வழக்கு போடுவார்கள்? என்று கூறி அந்த வாலிபரிடம் சமாதான போவதாக கையெழுத்து வாங்கியிருக்கின்றனர். சரியாக எழுத, படிக்க தெரியாத தாயும் பேப்பரில் என்ன எழுதியிருக்கிறது என்பதை அறியாமலேயே கையெழுத்து போட்டு விட்டு வந்துள்ளார். சில நாட்கள் கழித்து மீண்டும் அவர்கள் மகளிர் காவல் நிலையத்தை அணுகியுள்ளனர். 

அங்கிருந்த பெண் அதிகாரியும் இதற்கெல்லாம் வழக்கு போட்டு வாலிபரின் வாழ்க்கையை வீணாக்கி விடாதீர்கள் என்று கூறிவிட்டு, அவன் பிரச்சினை செய்தால் எனக்கு கால் செய்யுங்கள் என்று அவரது நம்பரை கொடுத்து உள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார் தாயும், மகளும் மானபங்கப் படுத்தியவன் மீது நடவடிக்கை எடுக்கக் கூட முடியவில்லையே நிர்பயா வழக்குக்கு பிறகு பாலியல் சட்டத்தை கடுமையாக்கி உள்ளதாக கூறினர். ஆனால், எல்லாம் வெறும் கற்பனைதான்.' என்று புலம்பியவாறு இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Girl harassed by young men in haryana 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->