போனில் கடலை.. நேரில் அல்வா.. பணத்தை இழந்த பெண்மணி.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் பகுதியை சேர்ந்த 35 வயது பெண்மணி, திருமணத்திற்க்காக மராத்தி திருமண இணையதளத்தில் தனது பெயர் மற்றும் விபரத்தை பதிவேற்றியுள்ளார். இந்த சமயத்தில், இணையத்தின் மூலமாக பாவின் தேவகவுடா என்ற பெயரில் கடந்த ஜூலை மாதம் அப்பெண்ணை தொடர்பு கொண்டு மர்ம நபர் பேசியுள்ளார். 

பின்னர் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்த நிலையில், மும்பை வந்து தங்களை சந்திப்பதாகவும், இதற்கு முன்பு பரிசுப் பொருள் ஒன்றை பார்சலில் அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், சில நாட்கள் கழித்து அந்த பெண்ணிற்கு அழைப்பு வந்த நிலையில், எதிர்முனையில் பேசிய நபர் தான் சுங்கத்துறை அதிகாரி பேசுகிறேன் என்று கூறியுள்ளார். 

இதனைநம்பிய பெண்மணியும் அதிகாரி என்று எண்ணி பேசிய நிலையில், தங்களுக்கு விலை உயர்ந்த பார்சல் வந்திருக்கிறது என்றும், இதனை பெற ரூ.3 இலட்சம் வரி செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பிய பெண்மணி, வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி வைத்துள்ளார். ஆனால், எதிர்பார்த்தபடி பார்சல் வரவில்லை. இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டு இருப்பதாய் உறுதி செய்து, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், உறுதியற்ற தகவலை மக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Girl cheated by marriage police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->