ரூ.800 குர்தாவிற்கு ரூ.79 ஆயிரம் கட்டிய பெண்..! அழகான குரலின் ஆபத்தான பின்னணி பகீர் தகவல்..!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரை சார்ந்த இளம்பெண்ணொருவர் இ-காமர்ஸ் என்ற செயலியை தனது அலைபேசியில் பதிவிறக்கம் செய்துள்ளார். இந்த செயலி கூகிள் இணையதளத்தால் அங்கீகாரம் செய்யப்படாத போலியான செயலியாக இருந்த நிலையில்., இதனை அறியாத பெண்மணி செயலிக்குள் சென்று தனக்கு தேவையான பொருட்களை தேடியுள்ளார். 

இந்த நேரத்தில்., இவருக்கு பிடித்தாற்போலவே குர்தா ஒன்று தென்படவே., ரூ.800 என்று விலையும் அச்சிடப்பட்டதால் இதனை வாங்க ரூ.800-யும் இணையம் மூலமாகவே செலுத்திய நிலையில்., இவரது பணம் எடுக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி மட்டும் வந்துள்ளது. 

இந்த நிலையில்., நீண்ட நாட்கள் ஆகியும் குர்தா வந்தடையும் தேதி தெரிவிக்கப்படாமல் இருந்த நிலையில்., செயலியில் இருக்கும் உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் சாமர்த்தியமாக வங்கி கணக்கு விபரங்களை வாங்கி கொள்ளவே., இறுதியாக ஒடிபியையும் எவ்விதமான சந்தேகம் இன்றி தெரிவித்துள்ளார். 

மொத்தமாக ரூ.79 ஆயிரம் அடுத்த நொடியே பறிபோன நிலையில்., இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. இணைப்பு துண்டித்தவுடன் வந்திருக்கும் குறுஞ்செய்தியை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இதனைத்தொடர்ந்து புகாரை ஏற்ற சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யாராக இருந்தாலும் புதிய அலைபேசி மற்றும் புதிய செயலி பதிவிறக்கம் செய்யும் சமயத்தில்., அது குறித்த விழிப்புணர்வை தெரிந்து கொள்ள வேண்டும்.. அல்லது தெரிந்த நபர்களிடம் விபரங்களை கேட்டறிந்து செயல்படுவதே சாலச்சிறந்தது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl cheated by fraud website


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->