ஜெர்மனி : ஜி-7 உச்சி மாநாடு.. பிரதமர் மோடி பங்கேற்பு.! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி, இன்று இரண்டாவது நாளாக நடைபெறும் 48-வது ஜி7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்கிறார்.

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் ஜி-7 நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் இந்த அமைப்பின் மாநாடு நடப்பது வழக்கம்.

அதன்படி, G7 மற்றும் விருந்தினர் நாடுகளுடன் இன்று சந்திப்புகளை நடத்துகிறார் மற்றும் சமகால பிரச்சினைகள் குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொள்கிறார்.

ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸின் அழைப்பின் பேரில், ஜெர்மனியில் ஸ்க்லோஸ் எல்மாவ், ஜெர்மன் பிரசிடென்சியின் கீழ் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர்மோடி கலந்து கொள்கிறார். 

அதன்பின், ஜூன் 28-ம் தேதி அன்று ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். முன்னாள் ஐக்கிய அரபு அமீரக அதிபரும், அபுதாபி ஆட்சியாளருமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானின் மறைவுக்கு தனிப்பட்ட முறையில் இரங்கல் தெரிவிக்க உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

G7 Summit meeting PM Modi participate


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->