ராமர் கோவில் கட்ட குவியும் பணம்.! பெரும் தொகையை வழங்கிய அறக்கட்டளை!  - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான தடையை டெல்லி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மூலமாக விலகியதால், அயோத்தியில் கோவில் கட்ட பல்வேறு அமைப்புகள் நன்கொடை வழங்க முன்வருகின்றன. 

பீகாரில் மாநிலத்தில்முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஆச்சார்யா கிஷோர் தலைமையில் மகாவீர் சேவா அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில், மகாவீர் சேவா அறக்கட்டளை ராமர் கோவில் கட்ட ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் வீதம் 5 ஆண்டுகளுக்கு மொத்தம் .10 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது. தேவைப்பட்டால் மேலும் நன்கொடை வழங்கவும், ராமஜென்ம பூமிக்கு வரும் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கவும் தயாராக உள்ளதாக அந்த அறக்கட்டளை அறிவித்துள்ளது. 

ராமர் கோவிலை தற்போது கட்டத் தொடங்கினால், 200 கலைஞர்கள் 24 மணி நேரமும் பணியில் செயல்பட்டால் கோவிலை கட்டி முடிக்க சுமார் 5 ஆண்டுகள் ஆகும் என்றும் கோவிலுக்காக கற்களை செதுக்கும் ராமஜென்மபூமி நியாஸ் காரியசாலை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fund for build a ramar temple


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->