ஒரு குடும்பத்தில் 2 பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி.! - Seithipunal
Seithipunal


அரியானா மாநிலத்தில் பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் எனத் தேர்தல் அறிக்கையில் பாரதிய ஜனதா கட்சி வாக்குறுதி அளித்திருக்கிறது.   

அரியானா, மராட்டியம் மாநிலத்தில் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலை ஒட்டி  பாஜகவின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் முதலமைச்சர் மனோகர்லால் கத்தார் கூட்டாக வெளியிட்ட தேர்தல் அறிக்கை. 

ஒரு குடும்பத்தில் உள்ள 2 பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என்றும், 2022ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் சொந்த வீடு வழங்கப்படும் என்றும், இரண்டாயிரம் சுகாதார மையங்கள் உருவாக்கப்படும் என்றும், 500 கோடி ரூபாய் செலவில் 25 லட்சம் இளைஞர்களுக்கு தொழில்திறன் பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் வரை அடமான உத்தரவாதம் அல்லாத கடன்,  முதியோர் உதவித்தொகை 3 ஆயிரம் ரூபாயாக அதிகரிப்பு, மாணவிகளுக்கு தனி பேருந்துகள், பெண்களுக்கு உதவும் வகையில் தனி உதவி மையம் போன்ற  வாக்குறுதிகளும் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

free education for 2 girl children in one family


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->