இரவு நேரங்களில் பெண்களுக்கு கார்களில் இலவச பயணம், புதிய திட்டத்தை கொண்டுவந்த அரசு.!  - Seithipunal
Seithipunal


இரவு நேரத்தில் தங்களது வீடுகளுக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் பெண்களுக்கு உதவ ஆந்திர பாதுகாப்பு திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளனர்.

ஹைதராபாத் அருகே பெண் கால்நடை மருத்துவர் நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரோடு எரித்து கொன்ற சம்பவத்தையடுத்து, ஆந்திர மாநில காவல்துறையினர் இரவு நேரத்தில் பெண்களை பத்திரமாக வீட்டுக்கு அழைத்துச் செல்ல காவல்துறை சார்பில் அபேய் என்ற புதிய திட்டம் ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அபேய் திட்டத்திற்காக எட்டு கார்களும் 70 இருசக்கர வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் தங்களது வீடுகளுக்கு திரும்பும் பெண்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் 100 என்ற காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண்ணை தொடர்பு கொண்டு உதவி கேட்டால், உடனடியாக வாகனங்களுடன் சென்று வீட்டிற்கு செல்ல உதவி செய்யும்.

இந்த திட்டத்தில் செயல்படும் அனைத்து கார்களிலும் ஓட்டுனர் தவிர பெண் காவல் அதிகாரி உடலில் பொருத்தப்பட்ட கேமராவுடன் இருப்பார். இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இந்த பாதுகாப்பு சேவை செயல்படும் என ஆந்திர மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

free car travels for womens


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->