வங்கி கடனாளி விஜய் மல்லையா வழக்கு தள்ளுபடி.. இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் இருக்கும் பாரத ஸ்டேட் வங்கி உட்பட, இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளில் ரூ.9000 கோடி கடன் வாங்கிவிட்டு லண்டன் தப்பிச் சென்ற நபர் விஜய் மல்லையா. இவர் தனது தொழிலை பெருக்குவதாக கூறி, தனது சொத்துக்களை வெளிநாடுகளில் பெருக்க பல்வேறு வங்கிகளில் கடன் பெற்றுள்ளார். 

இவருக்கும் இந்திய வங்கிகள் தாராளமாக கடன் தொகையை கொடுத்து இருந்த நிலையில், ரூ.9 ஆயிரம் கோடி கடனை திருப்பி செலுத்த வக்கில்லாமல் லண்டனுக்கு தப்பிச் சென்றார். இதனையடுத்து பல்வேறு வழக்குகள் இவர் மீது பதிவு செய்யப்பட்டு, இவருக்கு இந்தியாவில் சொந்தமாக இருக்கும் பங்களாக்கள், வீடுகள் போன்றவை ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டன. 

இந்த நிலையில், லண்டன் தப்பிச் சென்றுள்ள இந்திய கடனாளி விஜய் மல்லையா, லண்டனில் எந்தவிதமான பிரச்சனையும் இன்றி சுற்றி வரும் நிலையில், இவரைக் கைது செய்து இந்தியா அழைத்துவர இந்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 

இந்த நடவடிக்கைக்கு எதிராக விஜய் மல்லையா அங்குள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இதுகுறித்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், தற்போது இந்த வழக்கை தள்ளுபடி செய்து அறிவித்துள்ளனர். 

இந்த நிலையில், இந்த வழக்கின் பின்புலத்தில் இந்திய அரசு கொடுத்த மறைமுக அழுத்தத்தால் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், துவக்கத்தில் இருந்தே இந்தியாவிற்கும், இங்கிலாந்திற்கும் இடையே இருந்த நட்பு உறவு, இந்திய வம்சாவளி மருத்துவர்களால் அங்கு பிழைத்த உயிர்கள் போன்ற பல காரணத்தை கருத்தில் கொண்டு இந்த சர்ச்சைக்குரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fraud vijay mallya appeal dismiss by court


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->