நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றிய தமிழக டிஜிபி..! - Seithipunal
Seithipunal


நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததன் மூலமாக தேனி அரசு மருத்துவமனையில் மருத்துவப் படிப்பில் சேர்ந்த வழக்கை தமிழக டிஜிபி திரிபாதி, சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுருக்கிறார்.

ஆள் மாறாட்டம் செய்த வழக்கில் மாணவர் உதித் சூர்யா, மும்பையில் பயிற்சி பெற்று நீட் தேர்வு எழுதிருப்பதாகவும், பெங்களூரில் நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்றுள்ளார் என்பது தேனி போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது.

இந்த நிலையில், இது தொடர்பான வழக்கை தமிழக டிஜிபி திரிபாதி, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியுள்ளார். உதித் சூர்யாவின் தந்தை சென்னை அரசு ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் தலைமை மருத்துவராக பணிபுரிந்து வந்ததால் தேனி மாவட்ட போலீசார் கடந்த வாரத்தில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் மருத்துவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

தற்போது வரை இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் மாணவர் உதித் சூர்யா மற்றும் அவருடைய தந்தை வெங்கடேசன் ஆகிய இருவரும் தலைமறைவாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fraud In Neet Exam


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->