கேரளா || நொடி பொழுதில் அரங்கேறிய சம்பவம்... 105 விமான பயணிகளின் உயிர் தப்பியது..!! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஓமன் நாட்டின் மஸ்கட்டுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று காலை 8:30 மணி அளவில் புறப்பட்டது. அந்த விமானத்தில் 105 பேர் பயணம் மேற்கொண்டனர். விமானம் புறப்பட்டு சென்ற பொழுது விமானத்தில் ஏற்பட்ட கோளாறை அந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் கவனித்துள்ளார். 

இதனை அடுத்து விமானத்தில் ஏற்பட்ட கோளாறு உடனடியாக விமானிகளுக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து புறப்பட்ட இடத்திற்கு மீண்டும் திரும்பியது. அதன்படி திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு காலை 9:17 மணி அளவில் பாதுகாப்புடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறக்கப்பட்டது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதாக அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ஓமன் நாட்டின் மஸ்கட்டுக்கு செல்ல வேண்டிய அனைத்து பயணிகளும் மாற்று விமானம் மூலம் பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி இன்று மதியம் 1:00 மணி அளவில் அனைத்து பயணிகளும் மாற்று விமானத்தில் மஸ்கட்டுக்கு புறப்பட்டுச் சென்றனர். இந்த சம்பவம் விமான பயணிகள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சில நாட்களுக்கு முன்பு நேபாளத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் அனைத்து பயணிகளும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Flight from Kerala to Oman lands due to technical issues


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->