ஆற்றில் அடித்துசெல்லப்பட்ட தந்தை, மகன்., உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்!! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம் பழையபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் திருமூர்த்தி, இவரது மகன் கிருஷ்ணனுடன்(வயது 12) நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள பட்லூர் ஆற்றில் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரின் வேகம் அதிகரித்ததால், கிருஷ்ணன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். 

இதையடுத்து, மகனை காப்பாற்றுவதற்காக முயற்சித்த திருமூர்த்தியும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். அங்கிருந்தவர்கள் இருவரும் ஆற்றில் அடித்து சென்றது பற்றி தீயணைப்பு துறையினர்க்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தகவலறிந்து  வந்த தீயணைப்பு துறையினர், கடும் போராட்டத்திற்கு பிறகு, சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் இருவரையும் பத்திரமாக மீட்டனர். 

ஆற்றில் மூழ்கிய சிறுவனை மீட்டு முதலுதவி செய்து சிறுவன் உயிரை திருச்செங்கோடு தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றினர். இந்த காணொளி சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. முதலுதவி அளித்து சிறுவன் உயிரை காப்பாற்றிய திருச்செங்கோடு தீயணைப்பு வீரர்களுக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. "முதலுதவி அறிவதன் முக்கியத்துவம் என்னவென்பதை இப்போதாவது நாம் அறிந்துகொள்ள வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fire officer first aid video


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->