தீப ஒளி - ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பட்ட விபத்துகள்.! - Seithipunal
Seithipunal


தீப ஒளி பண்டிகை நாளான நேற்றைய நாளில் மட்டுமே பல்வேறு முக்கிய நகரங்களில் 100க்கும் மேற்பட்ட தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளது. 

அந்த வகையில்,தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் சுஷ்மா திரையரங்கம் அருகே உள்ள டயர் கிடங்கில் பயங்கரமான தீ விபத்து நிகழ்ந்தது.

மேலும், மும்பையில் சயன் பகுதியில் அமைந்துள்ள பழைய பொருட்கள் கிடங்கு ஒன்றில் பயங்கர தீ விபத்து நேர்ந்தது. இதை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

மும்பையில் பட்டாசுகள் வெடித்ததன் காரணமாக காற்றில் மாசு அதிகரித்துள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இதே போல் தலைநகர் டெல்லியில் மாசு நிலை மிகவும் மோசமான நிலைக்கு அதிகரித்தது. ஏற்கனவே மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் டெல்லி நேற்று வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் மாசு நிலையை அதிகரித்துள்ளது. குடிநீர் லாரிகள் மூலம் மாசு நிலையை கட்டுப்படுத்த சாலைகளில் தண்ணீர் தெளிக்கப்பட்டது

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள சிகையலங்கார கடையில் நேற்று தீ விபத்து ஏற்பட்டதில் கடையில் இருந்த பொருட்கள் கருகின. 4 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fire accident in india on diwali


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->