பிரதமர் வீடு கட்டும் திட்டம் : பட்ஜெட்டில் ரூ.54 ஆயிரத்து 487 கோடி நிதி ஒதுக்கீடு.! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு வருடமும் நடப்பாண்டிற்கான மத்திய அரசின் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான (2023-2024) மத்திய அரசின் முழு பட்ஜெட் நேற்று முன்தினம் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது.

 

இதைத் தொடர்ந்து, இந்த முழு பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டு, பின்னர் உரையாற்றினார். இதில், தனி நபர் வருமான வரி உச்சவரம்பு உயர்வு, ஆன்லைன் பரிவர்த்தனைக்கான உச்சவரம்பு உயர்வு, எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான வரி குறைவு, தங்கத்தின் இறக்குமதி வரி உயர்வு என்று பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

அந்த வகையில், ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள பிரதம மந்திரியின் கிராம சதக் யோஜனா திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி கடந்த ஆண்டு பட்ஜெட் போலவே ரூ.19 ஆயிரம் கோடி ஒதுக்கபட்டுள்ளது. 

அதேபோல், 'அஜீவிகா' எனப்படும் தேசிய வாழ்வாதார திட்டத்துக்கு ரூ.14 ஆயிரத்து 129 கோடியும், பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு, ரூ.54 ஆயிரத்து 487 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிதி, கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ஒதுக்கியதை விட சற்று அதிகம். மேலும், இந்தாண்டு சியாம பிரசாத் முகர்ஜி ரூர்பன் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fifty foru thousand crores fund allocation for Prime Minister's House Project in union budget


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->