ஆன்லைன் வகுப்பு: ஸ்மார்ட் போன் வாங்கி தர முடில.. என்ன ஏன் பெத்த.? மகளின் கேள்வியால், தந்தை தற்கொலை.! - Seithipunal
Seithipunal


திரிபுராவின் மேற்கு மாவட்டத்தில் உள்ள மதுவூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவருக்கு, மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். அவர் தினக்கூலி செய்து குடும்பத்தை நடத்தி வருகின்றார். கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானமானது மிகவும் குறைந்துவிட்டது. கிடைக்கின்ற சொற்ப பணத்தை வைத்துக்கொண்டு அவர் குடும்பம் நடத்தி வந்துள்ளார். 

இந்நிலையில் 15 வயதான அவருடைய மூத்த மகள் பள்ளியில் நடத்தும் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்வதற்காக தனக்கு ஸ்மார்ட் போன் வாங்கி தரவேண்டும் என்று அவரிடம் கூறியுள்ளார். தனது தகுதிக்கு ஏற்ப சுகுமார் குறைந்த விலையில் சாதாரண போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். ஆனால், அவருடைய மகள் எனக்கு இந்த போன் வேண்டாம் என்று கூறி திட்டியுள்ளார். 

மனைவியும், மகளும் சேர்ந்து சுகுமாரை கடுமையாக திட்டி இருக்கின்றனர். மேலும், தந்தை வாங்கிக்கொடுத்த புது போனை அவர் மகள் தூக்கி போட்டு தரையில் அடித்து நொறுக்கி இருக்கின்றார். 

இதன் காரணமாக அவமானமடைந்த சுகுமார் மிகுந்த மன உளைச்சலில் தன்னுடைய வீட்டில் இருந்த அறையொன்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

father suicide who scolded by his daughter


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->