வைரலான வீடியோ! உண்மை என்ன?! வெளியான விளக்கம்!  - Seithipunal
Seithipunal


இரண்டு மருத்துவர்கள் தங்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுவது போல பாசாங்கு செய்த வீடியோ இன்று இந்தியா முழுவதும் பரப்பப்பட்டது. அனைவரும் அதனை உண்மை என்றே நம்பினார்கள். 

ஆனால் உண்மையில் நிகழ்ந்தது என்ன? என தற்போது தெரியவந்துள்ளது. கர்நாடகாவில் உள்ள தும்கூரைச் சேர்ந்த மருத்துவமனை ஒன்றில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி அந்த மருத்துவமனையின் மூத்த மருத்துவர்களான டாக்டர் ரஜனி ( பெண் மருத்துவர்) மற்றும் டாக்டர் நாகேந்திரப்பா ஆகியோர் கோவேக்சின் தடுப்பூசியை பெற்றுக்கொண்டனர். 

ஆனால் அவர்கள் தடுப்பூசி பெறும் போது அதை நிருபர்கள் இல்லாததால் படம் பிடிக்கவில்லை. எனவே நிருபர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் தடுப்பூசி பெறுவது போல போஸ் கொடுக்க அதை படம் பிடித்திருக்கின்றனர். அதில் ஒரு நிருபர்
வீடியோ எடுத்து பரப்பி இருக்கிறார். 

இந்த நிகழ்வையொட்டி ஆய்வு செய்த தும்கூர் துணை கமிஷனர் டாக்டர் ராகேஷ் சர்மா வீடியோவில் கண்ட இரண்டு மருத்துவர்களும் முறையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எனவும் நிருபர்கள் படம் பிடிப்பதற்காக போஸ் கொடுத்ததாகவும் உறுதி அளித்துள்ளார். 

எனவே இனிமேல் அந்த இரண்டு மருத்துவர்கள் மீது அவதூறு பரப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. அந்த வீடியோவை பரபபிய வேகத்தில், இந்த உண்மையையும் பரப்பிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்படுகிறது. மக்களின் நம்பிக்கையை குலைக்கும் இதுபோன்ற செய்திகளை ஆராய்ந்த பிறகு பகிருங்கள் எனவும் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fake news spread about Tumkur doctors


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->