வெளியானது முழு தேர்தல் அட்டவணை! 64 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!  - Seithipunal
Seithipunal


நவம்பர் 2 மற்றும் நவம்பர் 9 ஆம் தேதியுடன் ஆட்சி காலம் முடிவடைய உள்ள அரியானா மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிக்க உள்ளார். 

இன்று செய்தியாளர்களை சந்திக்கும், அவர் 288 தொகுதிகளை கொண்ட மஹாராஷ்ட்ராவிற்கும், 90 தொகுதிகளை கொண்ட அரியாணாவிற்கும் தேர்தல் அறிவிக்க உள்ளார். இரண்டு மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுவதுடன், பிற மாநில சட்டமன்ற இடைத்தேர்தல்களும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. 

இந்த இரண்டு மாநில பொதுத்தேர்தலுடன் நாடு முழுவதும் காலியாக இருந்த 64 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், அசாம், குஜராத், இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம்., மேகாலயா, ஒடிசா, புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் மொத்தம் 64 தொகுதிகள் காலியாக இருக்கிறது. 

தேர்தல் அட்டவணை! 

வேட்புமனு தாக்கல் ஆரம்பம் : செப்டம்பர்  27

வேட்புமனு தாக்கல் முடிவு : அக்டோபர் 04

வேட்புமனு பரிசீலனை : அக்டோபர் 05

வேட்புமனு வாபஸ் பெற : அக்டோபர் 07

தேர்தல் வாக்குப்பதிவு : அக்டோபர் 21

தேர்தல் முடிவுகள் : அக்டோபர் 24

இடைத்தேர்தல் தேர்தல் அட்டவணை!

வேட்புமனு தாக்கல் ஆரம்பம் : செப்டம்பர்  23

வேட்புமனு தாக்கல் முடிவு : செப்டம்பர்  30

வேட்புமனு பரிசீலனை : அக்டோபர் 01

வேட்புமனு வாபஸ் பெற : அக்டோபர் 03

தேர்தல் வாக்குப்பதிவு : அக்டோபர் 21

தேர்தல் முடிவுகள் : அக்டோபர் 24


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

election time table for Haryana and Maharashtra


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->