திடீரென்று வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்ட வி.ஐ.பி தொகுதி..? பதற்றத்தில் தேசிய கட்சி தொண்டர்கள்..! - Seithipunal
Seithipunal


அமேதி தொகுதியில் சர்வர் பாதிக்கப்பட்டதால் தற்காலிகமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது.

வரலாற்றில் இல்லாத நிகழ்வாக அமேதி தொகுதியில் நேரு குடும்பத்தார் முதன்முறையாக ஒரு பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.

அமேதி தொகுதியில் பாஜகவின் ஸ்மிதி இராணி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இடையே கடுமையான போட்டி நிகழ்கிறது. முதன்முறையாக இத்தொகுதியில் காங்கிரஸ் தற்போதைய சூழலில் பின்னடைவை சந்தித்துள்ளது.

தபால் வாக்கு மற்றும் வாக்கு  எண்ணிக்கையின் அடிப்படையில் ராகுல் காந்தி பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

ராகுல் காந்தி கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஸ்மிருதி இராணியைவிட 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் தற்போது நிலை தலைகீழ் மாற்றம் கண்டுள்ளது.

ராகுல் தற்போது அமேதியில் மட்டுமல்லாது கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டுள்ளார். வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி முன்னிலை பெற்றுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

election stopped due to server error


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->