இன்று தேர்தல் முடிவு அவ்வளவு சீக்கிரத்தில் வெளியாகாது - கடைசி 4 மணி நேரத்தில் நடக்கும் மாற்றம்..? அதிர்ச்சியில் எதிர் கட்சிகள்.! - Seithipunal
Seithipunal


மக்களவைக்கு கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் மே மாதம் 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது.

தமிழகத்தில் வேலூர் தொகுதியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதால் அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டு மீதியுள்ள 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. 

இந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும் முக்கிய போட்டி நிலவியது.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் மற்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளும் பாஜக கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றும் தெரிவித்தன.

இந்நிலையி்ல், மக்களவையின் 542 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

வழக்கமாக காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும்போது  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும்.

மாலைக்குள் எந்தக் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்கும் என்று உறுதியாகத் தெரிந்துவிடும்.

ஆனால், இந்தத் தேர்தலில் முதல்முறையாக ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் தலா 5 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை விவிபாட் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனால் முடிவுகள் அறிவிக்க 4 மணி நேரம் தாமதம் ஆகும் என்று தேர்தல் ஆணைய தரப்பில் கூறப்பட்டுள்ளது. விவிபாட் ஒப்புகைச் சீட்டை முதலில் எண்ண வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்துள்ளது தேர்தல் ஆணையம்.

மாறாக குளறுபடி ஏற்படும் சமயத்தில் விவிபாட் ஒப்புகைச் சீட்டை எண்ணி உறுதி படுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

election-results-process-will-be-delayed-by-few-more-hours


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->