காபியோடு சேர்த்து கப்பையும் சாப்பிடலாம்.! வினோத கப்.. பயன்பாட்டிற்கு வருகிறது.!  - Seithipunal
Seithipunal


கடந்த ஜனவரி 1 முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதை தொடர்ந்து, பல்வேறு நாடுகளும் அதனை கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகின்றது. இதனை தொடர்ந்து, உணவகங்கள் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து வாழை இலைக்கு மாறிவருகின்றனர்.

தேநீர் கடைகளில் கூட சில்வர் டம்ளர் மற்றும் கண்ணாடி டம்ளர்களில் டீ, காபி கொடுத்து வருகின்றனர். ஆனால், பல இதனால் டீ, காபி, ஜூஸ் ஆகியவற்றை பிளாஸ்டிக்கில் தான் கொடுத்து வருகின்றனர். இதனை பிளாஸ்டிக் கப்புகளில் குடிப்பதால் உடலுக்கு தீங்குதான் ஏற்படும்.

தற்போது டீ அல்லது காபி குடித்த உடன் கப்பையும் சேர்த்து சாப்பிடும் வகையில் தயாரிக்கப்பட்டு இருக்கின்றது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஜினோம்லேப் என்ற நிறுவனம் இந்த ஈட் கப்-ஐ தயாரித்துள்ளது. இந்தத் கப்பில் சூடான அல்லது குளிர்ந்த பானங்கள் இரண்டையும் குடிக்கலாம்.

40 நிமிடம் வரை இது நமத்து போகாமல் இருக்கும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் தானியங்களை கொண்டு இந்த கப் தயாரித்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மேலும், இது குறித்து நிறுவனம், " தானியங்கள் மற்றும் சுவையாக இருக்க கூடிய நார்ச்சத்து மிகுந்த பொருட்களை கொண்டு மொறுமொறுப்பாக இருக்கும் வகையில் எந்த விதமான செயற்கை வாரங்கள் மற்றும் செயற்கை பொருட்களும் சேர்க்கப்படாமல் தயாரிக்கப்பட்டு இருக்கின்றது. பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க இது மிகவும் உதவியாக இருக்கும்." என தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eat cup in hydrabad


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->