நாசிக்கில் 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரின் வடக்கு பகுதியில் இன்று அதிகாலை 4.04 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா நாசிக் நகரத்திற்கு 89 கிலோமீட்டர் வடக்கிலும், தரைமட்டத்திலிருந்து 5 கிலோமீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.6 என்ற அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கியதால் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்து வீதிகளுக்கு வந்தனர்.

மேலும் இந்த நிலநடுக்கத்தால் பொருட் சேதங்கள் அல்லது உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Earthquake in nashik Maharashtra


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->