காஷ்மீரில் நிலநடுக்கம்.! ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவு.! - Seithipunal
Seithipunal


காஷ்மீரில் நள்ளிரவு 12.37 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் வடக்கு அட்சரேகை 33.48 டிகிரியும், கிழக்கு தீர்க்கரேகை 75.59 டிகிரியாகவும், பஹல்காம் பகுதியில் 5 கிலோ மீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.7ஆகப் பதிவாகியுள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிர் சேதமோ அல்லது பொருள் சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

காஷ்மீரில் கடந்த 2005ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி 7.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Earthquake in Kashmir


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->