இ-பாஸ்... விண்ணப்பம் செய்வது எப்படி? முழு விவரம் உள்ளே.!! - Seithipunal
Seithipunal


நீங்கள் உங்கள் சொந்த வாகனத்தில் தமிழ்நாட்டிலிருந்து வெளியே செல்ல அல்லது உள்ளே வர விரும்பினால், https://tnepass.tnega.org/ இணையதளத்தில் பாஸஷுக்கு விண்ணப்பிக்கவும்.

இ-பாஸை பெற தமிழக அரசின் https://tnepass.tnega.org/  என்ற வலைதளத்திற்கு முதலில் செல்ல வேண்டும். அங்கு உங்களின் மொபைல் எண் கேட்கப்படும். அந்த இடத்தில் உங்கள் மொபைல் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். அதன்பின் கீழ் உள்ள கேப்சாவை உள்ளீடு செய்ய வேண்டும்.

அதன்பின் ஓடிபி உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும். அந்த ஓடிபியை உள்ளீடு செய்து உள்நுழையலாம். உள்ளே சென்றவுடன்,

தனிநபர்/குழு (சொந்த/வாடகை வாகனம்)

தமிழ்நாட்டின் உள்நுழைதல்

தொழில் நிறுவனங்கள்

தமிழ்நாட்டிற்குள் பயணம் செய்ய ஆகிய நான்கு தேர்வுகள் இருக்கும்.

இதில் உங்கள் விருப்பத்தேர்வை தேர்ந்தெடுத்து கொள்ளவும்.

தனிநபர்/குழு : ஒரே மண்டலத்திற்குள் உள்ள மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய பாஸ் தேவையில்லை. ஆனால் வெளி மாவட்டங்களுக்கோ அல்லது வேறு எங்கேயாவதோ பயணிப்பதாக இருந்தால், Continue கொடுத்து, தொடர்ந்து உள்ளே செல்லுங்கள்.

தமிழ்நாட்டின் உள்நுழைதல் : இதை கிளிக் செய்தால் ரயில், உள்நாட்டு விமானம், சர்வதேச விமானம் என்ற விருப்பத்தேர்வுகள் இருக்கும். இதில் உங்களுக்கு விருப்பமான தேவையை கிளிக் செய்யவும்.

தொழில் நிறுவனங்கள் : தொழில் நிறுவனங்கள் கிளிக் செய்தால் சென்னைக்கு உள்ளே, சென்னைக்கு வெளியே என்ற விருப்பத்தேர்வுகள் இருக்கும். இதில் உங்களின் விருப்பமான தேவையை கிளிக் செய்யுங்கள்.

தமிழ்நாட்டிற்குள் பயணம் : இதை கிளிக் செய்தால் ரயில், உள்நாட்டு விமானம் என்ற விருப்பத்தேர்வுகள் இருக்கும். இதில் உங்களுக்கு விருப்பமான தேவையை கிளிக் செய்யவும்.

வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்ப :

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து தமிழ்நாடு வரவிரும்புபவர்கள் பதிவு செய்ய https://rttn.nonresidenttamil.org/ இணையதளத்தை கிளிக் செய்யுங்கள். இதில் தமிழ்நாடு திரும்புதன் குறித்த விபரங்களை இந்த இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

இந்த பக்கத்தில் 

உங்கள் பெயர்

வயது

பாலினம்

அடையாள அட்டை

தற்போது நீங்கள் இருக்கும் இடம், மாவட்டம் அதன் முகவரி 

தமிழகத்தில் நீங்கள் செல்ல இருக்கும் மாவட்டம், தாலுகா அதன் முகவரி

வெளி மாநிலத்தில் தங்கியிருப்பதன் காரணம்

தமிழகம் திரும்ப வருவதற்கான காரணம் போன்ற பல்வேறு விபரங்களை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.

தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்ல :

அரசு போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தி தமிழகத்தில் இருந்து செல்ல பிற மாநிலங்களுக்கு செல்ல https://rtos.nonresidenttamil.org/ இணையதளத்தை கிளிக் செய்யுங்கள். இதில் பிற மாநிலங்களுக்கு செல்வது குறித்த விபரங்களை இந்த இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

இந்த பக்கத்தில் 

உங்கள் பெயர்

வயது

பாலினம்

அடையாள அட்டை

தமிழகத்தில் நீங்கள் இருக்கும் மாவட்டம், தாலுகா அதன் முகவரி

தமிழகத்தை விட்டு நீங்கள் செல்ல இருக்கும் வெளி மாநிலம், மாவட்டம், தாலுகா அதன் முகவரி போன்ற பல்வேறு விபரங்களை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

e pass in palinadu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->