பரபரப்பான அரசியல் சூழலில், ராமதாஸ் வெளியிட்ட அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது காலை முதல் துவங்கியது.  வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே பாரதிய ஜனதா கட்சியானது பல தொகுதிகளில் முன்னிலையில் இருந்த நிலையில்., தற்போது பாரதிய ஜனதா கட்சி 346 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 

இதன் மூலமாக பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான அரசு மீண்டும் நாடாளுமன்றத்தை அலங்கரிக்க இருக்கும் நிலையில்., பிரதமர் மோடிக்கு உலகம் முழுவதும் இருந்து தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில்., பாட்டாளி மக்கள் கட்சியின்நிறுவனர் இராமதாஸ்., பாரதிய ஜனதா கட்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

in karnadaga devakavuda getting lower vote compare than bjp party member

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று வரும் 26 ஆம் தேதி இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்கவுள்ள மோடிக்கு பாமக சார்பில் எனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

2014 ஆம் ஆண்டில் இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற போது, இந்தியாவிலுள்ள ஒவ்வொருவரின் முன்னேற்றத்திற்காக உங்கள் ஒவ்வொருவருடனும்  எப்போதும் இருப்பேன் என்று உறுதியளித்து இருந்தீர்கள். அந்த வாக்குறுதியை நிறைவேற்றியதன் பயனாகவே இப்போது இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக தங்களை நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

modi tweet about success in election

அடுத்த ஐந்தாண்டுகளுக்கு  மக்களுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். உங்கள் தலைமையில் வளமான, வலிமையான நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று நம்புகிறேன். இந்தியாவின் பிரதமர் என்ற முறையில் அனைத்து முயற்சிகளிலும் நீங்கள் வெற்றி பெற எனது வாழ்த்துகள்" என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dr ramadoss send greeting message to pm modi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->