ஹெல்மெட் அணியாதவர்களுக்கு இனி மதுபானம் கிடையாது - மாநில அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு இனி மதுபானம் வழங்கப்பட மாட்டாது என மத்திய பிரதேசத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி விபத்துகள் நிகழ்ந்து வருகிறது. சாலையில் ஏற்படும் விபத்துகளால் உயிர் பலிகளும் அதிகமாகி வருகிறது. 

இதனையடுத்து வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், தலைக்கவசம் உயிர்க்கவசம் என்பதை வலியுறுத்தும் வகையில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியும் நடத்தப்படுகிறது.

இதற்கிடையில் மத்திய பிரதேசத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை அந்த மாநில அரசு தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் கிடையாது என்று முன்பு அறிவித்திருந்தனர். ஆனால் அந்த திட்டம் வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில் தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபுல்பூர் நகரில் ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு மதுபானம் விற்பனை வழங்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Don't wear helmet don't give wine drinks


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->