இந்தியாவிற்கு உதவி செய்ய அமெரிக்கா எப்போதும் தயார் - ட்ரம்ப் பேட்டி.! - Seithipunal
Seithipunal


இந்திய - சீன எல்லை பிரச்சனையானது நீண்ட காலமாக இருந்து வரும் நிலையில், பல வருடங்களுக்கு பிறகு சீனாவின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. இதனால் எல்லையில் போர் பதற்றமானது அதிகரித்து இருக்கிறது. மஸ்கொவில் சந்தித்துக்கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீன வெளியுறவுத்துறை வாங் யி, 5 அம்ச சமரச திட்டத்தை அறிவித்து, தளபதிகள் மட்டத்திலான இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்து வந்தது. 

இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் எல்லைகளில் படைகளை குவிப்பதை குறைக்கும் நடவடிக்கையை இருதரப்பும் மேற்கொண்டது. இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். 

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " இந்தியாவும் - சீனாவும் சிரமத்துடன் இருக்கிறது. கடினமான சிரமத்தை இரண்டு நாடுகளும் கொண்டுள்ளது. அவர்களுக்குள் ஏற்பட்டுள்ள எல்லா இப்பிரச்சனையை தீர்த்துக்கொள்ள இயலும். எங்களால் முடிந்த உதவியை செய்ய விரும்புகிறோம். இந்தியாவிற்கு உதவி செய்ய அமெரிக்க என்றுமே காத்திருக்கிறது " என்று கூறினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Donald Trump Says Wish to Help India about China India Border Issue


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->