காய்ச்சலால் துடித்த நபருக்கு வயிற்றில் இருந்த 6.3 அடி நீளத்திலான குடற்புழு.! அறுவைசிகிச்சையில் பதறிப்போன மருத்துவர்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜிந்த் பெகா கிராம பகுதியை சார்ந்தவர் ரவி. இவருக்கு அடிக்கடி காய்ச்சலானது ஏற்பட்டு வந்துள்ளது. காய்ச்சலை குணமாக்க பல மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்தும் பலனளிக்காததால்., அங்குள்ள ரோதக்கில் PGIMS மருத்துவமனைக்கு சென்றுள்ளார். 

மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உங்களுக்கு செரிமான கோளாறு இருக்கிறது., இதனால் தான் உங்களுக்கு செலுத்தப்படும் மருந்துகள் சரிவர பணியை செய்யவில்லை என்று கூறியுள்ளனர். 

இதனையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்ற நிலையில்., இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குடல் பகுதியானது சேதமடைந்திருப்பதை கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து அவருக்கு பலவிதமான சோதனைகள் செய்த நிலையில்., அவரது வயிற்றில் புழு ஒன்று உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது. 

hospital, surgery, doctor surgery

இவரது வயிற்றில் இருக்கும் புழுவை வெளியே எடுப்பதற்கு தேவையான உபகரணங்களை உடனடியாக தயார் செய்து., அறுவை சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்ற நிலையில்., நீண்ட நேர அறுவை சிகிச்சைக்கு பின்னர் சும்மர் 6.3 அடி நீளமுள்ள புழுவை உயிருடன் எடுத்துள்ளனர். 

இதனையடுத்து இது குறித்து மருத்துவர்கள் தெரிவித்தாவது., இது போன்ற புழுக்கள் வயிற்றில் வளருவதற்கு சரியாக வேகவைக்காத மற்றும் கழுவாத காய்கறிகளை சமைத்து சாப்பிட்டால் வயிற்றில் புழு  வளரும் என்றும்., இந்த புழுவானது நமது உடல் நலத்தை பாதித்து., மூளையை கூட செயலிழக்க வைக்கும் என்றும் கூறியுள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

doctor surgery patient to remove insets form stomach


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->