இரு ஆபரேஷன்களை முடித்துவிட்டு, தற்கொலை செய்து கொண்ட பெண் மருத்துவர்.! கதறியவாறு தாய் கூறிய நெஞ்சை உருக்கும் அதிர்ச்சி காரணம்!! - Seithipunal
Seithipunal


மும்பையில் உள்ள தீபவாலா  தேசிய மருத்துவ கல்லூரியில் பயல் தத்வி என்ற இளம்பெண் பயின்று வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் காலை இரண்டு அறுவை சிகிச்சையை முடித்துவிட்டு பயல் விடுதிக்கு திரும்பிய நிலையில், அறைக்கு சென்ற அண்ணா அவர் நீண்ட நேரம் கதவை திறக்காமல் இருந்துள்ளார்.

 இந்நிலையில் கதவை தட்டிய நிலையிலும், பயல் கதவு திறக்காததால் அதிர்ச்சியடைந்த தோழிகள் மற்றும் விடுதி பாதுகாப்பாளர்கள் கதவை உடைத்து பார்த்தபோது அங்கே பயல் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே பயலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணைய மேற்கொண்டனர். அப்பொழுது மகளின் தற்கொலை குறித்து பயல் தத்வியின் தாயார் கூறுகையில், இட ஒதுக்கீட்டின் மூலமாகத்தான் என்னுடைய மகள் பயல் மருத்துவ சீட்டு பெற்றார். இந்நிலையில் இதுகுறித்து பேசி மூத்த பெண் மருத்துவர்கள் 3 பேர் தன்னை சித்திரவதை செய்வதாக பயல் எங்களிடம் கூறி இருந்தார். நாங்களும் இது குறித்து அவர்களது விடுதி பாதுகாப்பாளரிடம் புகார் அளித்தோம்.அவர் அந்த மூன்று பெண்களையும் வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பினர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நான் எனது மகளுக்கு போன் செய்தேன். அப்பொழுது அவள் மீண்டும் சீனியர்கள் ஜாதிப் பெயரை சொல்லி தன்னை அவமானப்படுத்துவதாக கூறி வேதனைபட்டுள்ளார். இந்த நிலையில் நாங்கள் உடனடியாக மும்பைக்கு வந்து மருத்துவமனை நிர்வாகம் மற்றும் போலீசாரிடம் புகார் அளிக்கிறோம் கவலைப்படாதே என அவளை சமாதானப்படுத்தினோம். ஆனாலும் அவள் என்னால் சித்திரவதையைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என அழுதுகொண்டே போனை வைத்து விட்டாள் என கூறியுள்ளார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீஸார்  மூத்த பெண் மருத்துவர்களான ஹேமா அஹூஜா, பக்தி மேஹார் மற்றும் அங்கிதா கன்தெல்வால் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

doctor comit suicide for insulting seniors


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->