மருத்துவர்களின் போராட்டம் வெற்றி..! நோயாளிகளுக்கு அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


சில மாதங்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளி இறந்ததன் காரணமாக மருத்துவரால் தான் அவர் இறந்தார் என்று கூறி உறவினர்கள் மருத்துவரை தாக்கினர். இதுபோல பல்வேறு விஷயங்கள் நடைபெற்று வரும் போது மருத்துவ ஊழியர்களை தாக்குவதும் தொடர்ந்து வருகின்றது.

இந்நிலையில் மருத்துவர்கள் இதுகுறித்து போராட தொடங்கினர் மருத்துவர்களை தாக்குபவர்களுக்கு புதிய சட்டம் கொண்டு வந்து தண்டிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மருத்துவர்களின் இந்த கோரிக்கையை ஏற்று புதிய சட்டம் இயற்ற 8 பேர் கொண்ட குழுவை அமைத்தது.

அவர்கள் உருவாக்கிய சட்ட வரைவின் படி, மருத்துவர்கள் அல்லது மருத்துவப் பணியாளர்களை தாக்கிக் காயப்படுத்தினால் 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 2 முதல் 10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் மருத்துவமனை உபகரணங்களை சேதப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் உபகரணத்தின் விலையை விட இரண்டு மடங்கு அதிக விலை அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மற்ற அமைச்சகங்ளும் இதற்கு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், அடுத்த வாரம் சபைக்கு ஒப்புதலுக்காக இந்த வரைவு அனுப்பி வைக்கப்பட இருக்கின்றது. இதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்கள் மீதான வன்முறை அதிகரித்து வரும் நிலையில் இந்த சட்டம் மிகவும் அவசியமானது என்று தெரிவித்துள்ளார்.

உபகரணங்களை சேதப்படுத்தினால், இரு மடங்கு அபராதம் என்று கூறப்பட்டதால் காரணமாக, எதிர்பாராத விதமாக நோயாளிகள் ஏற்படுத்தும் சேதங்களும் இது பொருந்துமோ என்று அதிர்ச்சியில் இருப்பதாக தெரிகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

docters protest in india


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->