மது அருந்தினால் மாநிலத்துக்குள்ள வராதீங்க.. பீகார் மாநில முதல்வர் அதிரடி..! - Seithipunal
Seithipunal


மது அருந்தினால் எக்காரணம் கொண்டும் பீகாருக்குள் வர வேண்டாம் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலம் முழுமையும் கடந்த 5 ஆண்டுகளாக பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. ஆனால், அம்மாநிலத்தில் சில பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்பட்டது வந்தது. இதற்கிடையில், நாட்டு சாராயம் காய்ச்சினால் மரண தண்டனை விதிக்கும் சட்ட திருத்தமும் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், சசாரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல்வர் நிதிச்ஜ்குமார் பேசுகையில் மாநிலத்திற்குள் வருபவர்கள் கொஞ்சமெனும் மது அருந்த அனுமதி கேட்கிறார்கள் ஆனால், அது எப்படி சாத்தியமாகும். மற்ற மாநிலங்களில் இருந்து வருபவர்களை மது அருந்த அனுமதிக்கிறீர்கள் என கேட்டால் அவர்கள் பீகாருக்குள் வர வேண்டாம் என சொல்லுவேன் என தெரிவித்துள்ளார்.

 மேலும், மரு அருந்துபவர்கள் எவ்வளவு படித்திருந்தாலும் அவர் திறமையற்றவராகவும் சமூகத்திற்கு எதிரானவர்கள் என அவர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Do not come into the state if you drink alcohol


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->