ராஜஸ்தான், ஒடிசாவை அடுத்து பட்டாசுக்கு வெடிக்க தடை விதித்த மாநிலம்! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் தொற்று பரவலை கருத்தில் கொண்டு, சிக்கிம் மாநிலத்தில் பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது. இதனை அம்மாநில அரசு அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் வரும் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இது கொரோனா நோய் தொற்று பரவல் காலம் என்பதாலும், நோய் பரவல் தீவிரத்தை கருத்தில் கொண்டும், இந்த பண்டிகை காலத்தை பாதுகாப்புடன் கொண்டாட பிரதமர் மோடி, மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும், மத்திய - மாநில அரசுகள் வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் சிக்கிம் மாநிலத்தில் கொரோனா பரவல் மற்றும் குளிர் காலத்தை கருத்தில் கொண்டு பட்டாசு வெடிக்க மற்றும் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது,

இது குறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பட்டாசு வெடிப்பின் மூலம் காற்றில் உள்ள துகள்கள் செறிவை அதிகரிப்பதால், அது குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்த அவர்களின் உடல்நிலையை பாதிக்கும் எனவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

முன்னதாக மேற்கு வங்காள மாநிலம், ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசு வெடிக்க விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

diwali crackers BAN IN SIKKIM


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->