மோடி ஆதரவாளர்கள் குறித்து சர்ச்சையான பதிவு! பெரும்பரபரப்பை கிளப்பிய பிரபல நடிகை! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் குத்து படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா.மேலும் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்த அவர் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து சரியான படவாய்ப்புகள் கிடைக்காத நிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைத்த அவர் தற்போது காங்கிரஸ் கட்சியின் தேசிய சமூக ஊடக பிரிவின் தலைவியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இதனை தொடர்ந்து அவர் அவ்வப்போது பிரதமர் மோடி குறித்து கடுமையான விமர்சனங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.

   

இந்நிலையில் அவர் தற்போது சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவரது பதிவில், “உங்களுக்கு தெரியுமா? மூன்றில் ஒரு மோடி ஆதரவாளர் அடுத்த இரண்டு பேர் போலவே முட்டாள்” என குறிப்பிடப்பட்டிருக்கும் மீமை ஷேர் செய்துள்ளார்.
மேலும் அதில் இவர்கள் எனக்குப் பிரியமானவர்கள்! மகிழ்ச்சிகரமானது அல்லவா? எனவும் பதிவிட்டிருந்தார். 

இவரது கருத்துக்கு மோடியின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும் ஏற்கனவே பிரதமர் மோடியின் புகைப்படத்தில், அவரை திருடன் என குறிப்பிடும் வகையில் பதிவு ஒன்றை பகிர்ந்ததால் திவ்யா ஸ்பந்தனா மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .


 

English Summary

divya spandana controvasy tweet about modi


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal