கொரோனாவும் மனிதர்களை போல இருந்தால் தூக்கில் தொங்கிவிடும்... ஏகபோகமாக விற்பனையாகும் வைர மாஸ்க்குகள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றானது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மக்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல், முக கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்றவை கட்டாயமாக்கப்பட்டது. 

ஊரடங்கு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து பலவிதமான முகக் கவசங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக கூட மும்பையில் தங்க நகை கடை உரிமையாளர் ஒருவர் தங்கத்தாலான முக கவசத்தை அணிந்து இருந்தார். 

இந்த சூழ்நிலையில், சூரத்தில் உள்ள நகைக்கடையில் வைர மாஸ்க் விற்பனைக்கு துவங்கியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில் இருக்கும் நகை கடையில் சுமார் 1.5 லட்சம் மதிப்பில் இருந்து ரூ.4 இலட்சம் மதிப்பு வரை வைர முக கவசம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இந்த விஷயம் தொடர்பாக அந்த நகை கடையின் உரிமையாளர் தெரிவிக்கையில், ஊரடங்கு என்பது கொஞ்சம் கொஞ்சமாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த காலத்தில் கட்டுப்பாடுடன் கூடிய திருமணம் நடைபெற்று வருகிறது. 

இதில் என்னிடம் வந்த ஒரு திருமண வீட்டார் மாறுபட்ட மாஸ்க்கை செய்யக்கோரி கூறினர். இதன்படி, நாங்கள் எங்களது பணியாளர்கள் மூலமாக வைரத்தினால் ஆன மாஸ்கை உருவாக்கம் செய்ய முடிவு செய்து உருவாக்கினோம்.. இந்த மாஸ்க் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வைர மாஸ்க் சுத்தமான இந்திய வைரம் மற்றும் அமெரிக்க வைரமும் சேர்த்து செய்யப்பட்டது என்று கூறினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Diamond Mask Sales introduced in Gujarat


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->