மடைதிறந்து, கரைபுரண்டு வரும் காவேரி.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து காவிரியில் 52 ஆயிரத்து 300 கன அடி நீர் தற்போது திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்து இருக்கிறது.

கபினி அணை நிரம்பும் தருவாயில் இருக்கும் காரணத்தால், அணையிலிருந்து நொடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர் தற்போது திறந்துவிடப்படுகிறது. இதனைப் போன்று கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்தும் 3 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.

கர்நாடக அணைகளில் அதிகளவில் தண்ணீர் நிரம்பி இருக்கும் காரணத்தால், அங்கு அடுத்தடுத்து அணையில் திறக்கப்பட்ட நீர் காவிரி ஆற்றில் வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் காவிரி கரையோரத்தில் இருக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்ட நிர்வாகம் சார்பாக முன்னெச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான ஒகேனக்கல், ஊட்டமலை, நாடார் கொட்டாய் உள்ளிட்ட காவிரி கரையோர கிராமங்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dharmapuri Near Kavery River village warn about Flood


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->