நாங்கள் பெற்றதே போதும்.. இனி இந்த தவறை நான் செய்யவே மாட்டேன்.. தேவகவுடா தடாலடி..!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் கடந்த 2018 ஆம் வருடத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தனியொரு கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத காரணத்தால்., காங்கிரஸ் கட்சி - ஜனதா தளம் (எஸ்) கூட்டணியமைத்து ஆட்சியை கைப்பற்றிய நிலையில்., முதலமைச்சராக குமாரசாமி பதவியேற்றார். இக்கூட்டணி ஆட்சியானது 14 மாதங்கள் ஆட்சி செய்த நிலையில்., 15 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததால் ஆட்சியானது கவிழ்ந்தது.

இக்கட்சி கூட்டணி அரசானது கவிழ்வதற்கு சித்தராமையா காரணம் என்று தேவகவுடா மற்றும் குமாரசாமி பகிரங்கமாக குற்றம் சாட்டிய நிலையில்., ஆட்சி கவிழ்வதற்கு தேவகவுடாவின் குடும்பத்தினர் காரணம் என்று பரபரப்பு சித்தராமையா குற்றம் சாட்டினார். மேலும்., காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து தவறு இழந்துவிட்டதாக தேவகவுடா தெரிவித்திருந்தார்.

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் போது பாஜவுக்கு பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில்., காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி குறித்து தற்போது தேவகவுடா பேசியது தொடர்பான விவகாரத்தில்., சோனியா காந்தியுடைய முடிவு இறுதியானது என்றும்., அவர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்றும் காத்திருந்து பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார். 

siddaramaiah kumaraswamy, siddaramaiah kumaraswamy images,

இந்நிலையில்., பாஜக தலைவர்கள் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் உள்ஒப்பந்தம் செய்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள நிலையில்., இடைத்தேர்தலில் பாஜக குறைவான இடத்தில் வெற்றியடைந்தால்., எடியூரப்பா தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும்., காங்கிரஸ் - ஜனதாதளம் (எஸ்) கூட்டணியாட்சி மீண்டும் அமையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நேரத்தில்., தேவகவுடா காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கும் தவறை இனியும் செய்யமாட்டேன் என்று கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது. மேலும்., இது தொடர்பாக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் முதலமைச்சராக இருந்த குமாரசாமிக்கு., துவக்கத்தில் முதலே தொல்லைகள் இருந்தது. தற்போதும் இந்த தொல்லைகள் குறையாத நிலையில்., எங்களுக்கு தற்போது புரிதல் ஏற்பட்டுள்ளது. கூட்டணி வைத்து நாங்கள் அனுபவித்த துன்பங்கள் போதும்.. இனியும் இந்த தவறை செய்ய மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

devakavuda speech about next election alliance


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->